செவ்வாய், 12 ஏப்ரல், 2011

திகாரின் இரும்பு கம்பிகளுக்குள் சுருண்டுபோன கொள்கை 
இறையாண்மையின் இருட்டு பார்வையால் கருகிப்போன ஈழம் .
ஏப்ரல் 13 உண்மை தமிழனாய் சிந்திப்பீர்

செவ்வாய், 22 மார்ச், 2011

காத்திருக்கிறேன் .....!


இரவுகளில் நான்
இமை மூடி விழித்திருந்தேன் ,
உன் முகம் காணா வருத்தத்தில் .

நாட்கள் நரகமாய் 
மணித்துளிகள் யுகங்களாய் 
உணர்வுகள் வெறுமையாய்
சுகங்கள் சுமைகளாய்
கனவுகள் கவிதையாய்
தோன்றுகிறது எனக்கு ...

மௌனித்திருக்கும் என்  அலைபேசி 
சினுங்கும்போதேல்லாம் 
ஆர்பரித்து அடங்கிவிட்டேன்
நீ அழைக்காமல் போனதால் .

காத்திருக்கிறேன் 
உனக்காகவும் ,
உன் நட்பிற்க்காகவும்.

ஒரு நண்பனாய்,உற்ற தோழனாய்

-திரு 

திங்கள், 31 ஜனவரி, 2011

கவிதை


கண்ணே ,
நீ தோட்டத்தில் உலவ செல்லாதே.
பூக்கள் கோபபடுகின்றனவாம்!
தேன் உண்ண மறுத்து- வண்டுகள்
உன்னை  சுற்றுவதால் ...

அன்பே ,
நீ சீக்கிரம் கோலமிடசெல்,
முற்றத்து நிலவது காத்திருக்கிறது.
உன் முகம் பார்த்த பின்தான்
அது முகில் மறைய வேண்டும!

கண்ணே ,
நீ கூந்தல் சூடும் பூக்கள் எல்லாம்
ஓரிரு நாளில் வாடுவது இல்லையாம்!
பூக்காரி புலம்புகிறாள்.

அன்பே,
நீ நீர் இறைக்கும்போதேல்லாம் , கேணியில்
உள்ள மீன்களுக்குள் போட்டியாம்!
பிம்பமாக தோன்றும் உன் உதட்டில்
யார் முதலில் முத்தமிடுவதென்று.

                                                      ..... திரு 

























புதன், 15 டிசம்பர், 2010

நான் புதியவன் .இடுகைகள் உலகின் வாசலில் நுழைகிறேன். இந்த பரந்த உலகில் நானும் உலவுவதை என்னால் நம்ப முடியவில்லை . என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க உள்ளேன்.
நன்றி

திரு